தமிழரின் அவலநிலை



தமிழர் தேசிய இனம் என்பது எதோ ஓசூரில் ஆரம்பித்து குமரியில் முடிவதன்று இல்லை. எல்லை கடந்து,மதம் கடந்து,ஜாதி கடந்து ஒரு குறிபிட்ட வட்டத்துக்குள் தமிழர் தேசிய இனத்தை அடைத்துவிட முடியாது.அலெக்ஸ் கோல்லியர் போன்ற அறிவியல் நிபுணர்கள் உலகின் மூத்த மொழி நம் தமிழ் மொழிதான் என்று ஆணித் தனமாக கூறுகின்றனர். தமிழன் கால் படாத தேசம் இல்லை, ஆனால் இன்றோ தமிழனுக்கு என்று ஒரு தேசம் இல்லை.

பண்பாடு,நாகரிகம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்கிய தமிழனின் பெருமைகளும் அதற்கான சான்றுகளும் இன்று தமிழ்நாட்டில் கூட உருப்படியாக இல்லை.நாடு பல ஆண்ட நம் முன்னோர்களின் சிலைகள் கூட நாதிஇல்லாமல் வீதியில்தான் நிற்கிறது.நம்மை அண்டி பிழைத்தவர்கள் எல்லாம் இப்போது நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் என்பது வரலாற்று கொடுமை. நமது தமிழ் அரசர்களின் திறமைகளை பாராமல் அவர்களின் ஜாதியை பார்த்து,அவர்களை ஜாதிய தலைவர்களாக சித்தரித்து இன்று அரசியல் செய்துக்கொண்டு இருக்கும் தமிழர்கள் இங்கே ஏராளம்.

இதில் வேடிக்கை என்வென்றால்,நமது சொந்த சகோதர்கள் நமது மண்ணிலே அகதிகளாக இருக்கிறார்கள்,அவர்களை விடுவிக்க இன்றைய ஜாதிய அரசியல் செய்யும் கட்சிகளுக்கு துப்பு இல்லை.இவர்கள் தங்களின் முன்னோர்கள் இன்று சொல்லிகொள்ளும் நமது மண்ணின் அரசர்கள் ஆண்ட காலத்தில் எவனது இங்கே அகதியாக வாழ்ந்தான் என்று சான்று இருக்கிறதா? ஹ்ம்ம் கேவலம்.ஜாதியில் இருந்து தமிழன் வராதவரைக்கும் அகதிகள் முகம்மில் இருந்து ஒரு தமிழன் கூட வெளிய கொண்டு வர முடியாது.

பெயருக்குத்தான் இந்தியாவில் இருக்கிறோமே தவிர பெயரளவில் கூட இந்த தேசத்தில் நமக்கான எந்த உரிமைகளும் இல்லை. திருப்பி அடிப்பேன் என்று சொன்ன செந்தமிழனுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம் இருக்கிறது, திருப்பி திருப்பி என் தமிழ் மீனவனை ஒரு தறுதலை அடித்துக்கொண்டு இருக்கிறான்,அவனை தடுக்க ஒரு சட்டம் கூடவா இல்லை நம் தேசத்தில்?

நமது சொந்த சகோதர்களுக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால்,நம்முடைய உரிமை நம்மிடத்தில் இல்லை என்றுதானே பொருள்?நமது மண்ணில் நமக்கான உரிமை நம்மிடத்தில் இல்லாமல் அந்நியன் இடத்தில இருபது என்பது நமது தாயை நாமே இன்னொருவனுக்கு கூட்டி கொடுப்பதற்கு சமம்.

கேவலம் காசை வைத்துகொண்டு தமிழர்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறது இந்த திராவிட கட்சிகள். சுமார் அரை நுற்றாண்டு இந்த மண்ணை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளின் பெருமை மிக்க  செயல்கள் கட்சை தீவை தாரைவார்த்தது,காவேரி தண்ணீரை வாங்க முடியாதது,முல்லை பெரியார் அணை பிரச்சினை,தமிழர்களை இலவசங்களுக்கு அடிமை ஆகியது,எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ தமிழர்களுக்கு செய்த மனிக்கவே முடியாத துரோகம்.

.என்னை கடலில் துக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் போன்ற வீர வசனம் முதல் இன்றைய என் உயிர் எனும் மேலான வசனம் வரை இந்த திராவிட கட்சிகள் தமிழர்களை ஏமாற்றி மட்டுமே வந்துக் கொண்டு இருக்கிறது. .இதை எல்லாம் தமிழன் நினைவில் கொள்ள கூடாது என்பதற்காக இலவச தொலைகாட்சி ஒன்று கொடுத்து அதில் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா, நேச தலைவனுக்கு நீராட்டு விழா,ஊழல் தலைவனுக்கு ஊக்குவிக்கும் விழா என்று எண்ணற்ற விழாக்களை நடத்தி மானையும் மயிலையும் ஆட வைத்து தமிழனின் பெருமைகளை ஓட வைத்த பெருமைகள் இந்த கட்சிகளை சாரும். .இதை எல்லாம் தாண்டி ஆடு இலவசம் மாடு இலவசம் வீடு இலவசம் அடுப்பு இலவசம் அரிசி இலவசம் போன்ற எண்ணற்ற இலவசங்களை கொடுத்து தமிழர்களை இயலாமையின் பிள்ளைகளாக மாற்றிய வரலாற்று பெருமையும் இந்த திராவிட கட்சிகளையே சாரும்.

ஈழ தமிழர்களின் உயிரை உலையில் வைத்துவிட்டு
தங்கள் வீட்டில் அடுப்பு வைக்கிற எந்த கட்சியை செர்ந்தவகளாக இருந்தாலும் சரி
அதில் பொங்குவது சாதம் இல்லை
ஈழ தமிழனின் பிரேதம்.

தாயும் தாய்நாடும் தாய்மொழியும் நம்முடை அடையாளம் என்பதை நாம் என்னும் உணராமல் இருப்பது அறியாமையின் உச்சகட்டம்.தமிழ் சொல்லிகொடுக்க தமிழ்நாட்டில் பள்ளிகூடம் இல்லை,சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாட்டில்  பள்ளிகூடத்தில் தமிழ் பேசினால் அபராதம்.இதை போல கொடுமையை வேறு எங்கையாவது பார்த்தது உண்டா?
தமிழர் வரலாறை தமிழனிடத்தில் மறைத்தது தேசிய குற்றம்,இப்படியே போனால் அடுத்த தமிழ்  தலைமுறைக்கு ,,, தெரியாது,இளய பிள்ளைகள் ஏமாறி நிற்பார்கள்,தமிழ்நாடு தமிழர் இல்லாத நாடாகும்,ஈழ வரலாறு இயற்கை எயிதிருக்கும். தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆழத வரை இந்த அவல நிலை தொடர்ந்து கொண்டுதான்  இருக்கும் அது வரைக்கும் தமிழனும் தமிழ்நாட்டில் அகதிதான்.நாம் தமிழர் என்ற உணர்வு நமது உள்ளத்திலும் உயிரிலும் கலக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது.


தமிழர் வரலாறு படிப்போம்,               தமிழனே வா வரலாறு படைப்போம்.

எலியனெ இருந்தது போதும்,                புறப்படு தமிழா புலியனெ....

அருண்குமார்