எங்கே தமிழ்?




உயிரோடு செத்தவன் இன்று உளமாற எழுதுகிறேன் 
இழப்பதற்கு ஒன்றுமில்லை வாழ்வதற்கு நிறையவேயிருக்கிறது 

செத்தவனுக்கு இனி சாவில்லை 
தமிழ் இல்லாத தமிழனுக்கு வாழ்வில்லை 
நீயும் நானும் ஒரு தாயின் பிள்ளைகள் 
நானும் நீயும் வெளிநாட்டில் 
 நம்  தாய்  மொழி தமிழோ நடுரோட்டில் 

தாய் மொழி மறந்த நமக்கு இனி நாடும் இல்லை 
வீடும் இல்லை,அப்படியே இருந்தாலும் அது 
நம் மண்ணில் இல்லை 

நரிகளுக்கு பாசம் உண்டு 
தமிழனுக்கு தனி தேசம் இல்லை 
என்றே சொல்ல தோன்றுகிறது 

இடம்பெயர்ந்த தமிழன் தன் இடத்தை 
இனத்திற்கு விற்க்காமல் பணத்திற்கு விற்றடினால் 
இன்று தலைநகரை வேற்றுமொழி பேசுபவன்  ஆண்டுகொண்டு இருக்கிறான் 

யூதன் யூதனாக இருந்ததினால் நாடைந்தான் 
தமிழன் தமிழனாக இல்லாததினால் நாடுகடந்து 
நாதி இல்லாமல் நாயாய் திரிகிறான் 

நீயும் நானும் தமிழனாக இல்லாதவரை நம்நாடு 
தமிழ்நாடாக இருக்காது 
இருக்கும்வரை இருந்துவிட்டு போகலாம் என்று 
நாம் நினைத்தால் இறக்கும்வரை எதுவுமே இல்லாமல்தான் 
இறந்துபோவோம் 
இருக்கும்வரை உள்ளதை அநுபவிக்கலாம் என்று 
நாம் நினைத்தால் இறக்கும்வரை இலவசங்களை நம்பியே 
கல்லறை போவோம் 

தாய்மொழி அழிந்தால் தாய்நாடு அழியும் 
தாய்நாடு அழிந்தபின் அருவியாய் நம்  வாய்வழியாய்  வரும் 
ஆங்கிலத்தின் தாய்நாடான இங்கிலாந்தா நமக்கு  தாய்நாடு ???
                                                                 - சற்று சிந்தித்து பார்ப்போம்

தமிழ் உணர்வு கொள்வோம்
தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசுவோம் 
தமிழ் மொழி காப்போம்.....

அருண்குமார்