இளைஞன்



வாழ்க்கையென்னும் போர்களத்தில்
புலியாய் புகுந்து
எதிர்வரும் சவால்களை
ஏறி மிதித்து
இகழ்தோரெல்லாம்
உன் புகழ் பாட
புறப்படு!
உன் இளமையிலே
புறப்படு! 

நாளைய வாழ்க்கை
நாறாமல் இருக்க
வரும்கால வாழ்க்கை
பூத்து குலுங்க
துணைவியும் தலைமுறையும்
படர்ந்து வளர
புறப்படு!
உன் இளமையிலே
புறப்படு!

நாலா புறமும் நீ
நிமிர்ந்து நிற்க
நாளைய சமுதாயம் உன்னை
நன்கு மதிக்க
வேலையும் காசோலையும்
உன் திறமையை கணிக்க
புறப்படு!
உன் இளமையிலே
புறப்படு!

காலம் நிற்காது
கடவுளுக்கும் காத்திருக்காது
இளமை கடந்து நீ
முதுமையில் நுழையும்போது
தலையில் றைத்த மயிரும்
உதவாத கைகளும்,நிற்க முடியாத
கால்களும் உனக்கு துணை நிற்கும்
புறப்படாது!
உன் முதுமையில் ஒன்றும்
புறப்படாது!

ஆகவே நெஞ்சில் உறுதிக்கொண்டு
மதியில் திறன்கொண்டு
தோளில் வலிமைகொண்டு
கைகளில் நம்பிக்கைக்கொண்டு
புறப்படு!
உன் இளமையிலே
புறப்படு!