பசும்பால் மன்னன்

                                                 


பரபரப்பாக இருந்தது அரச சபை,இளவரசர் மீது சுமத்தப்பட்டிருக்கும் திருட்டு வழக்குக்கு மன்னர் என்ன தீர்ப்பு சொல்ல போகிறார் என்று அனைவரும் எதிர் பார்த்து கொண்டு இருந்தனர்.போன மாதம் தான் கோவில் நகை திருடிய விடையத்தில் மூர்த்திக்கு மரண தண்டனை விதித்து இருந்தார் மன்னர். இதுவும் அது போன்ற ஒரு திருட்டு வழக்கு தான் ஆனால் இது வேற திருட்டு. நேற்று மாலை வேட்டையாட சென்று இருந்த இளவரசர் அந்த பக்கத்தில் அழுது கொண்டு இருந்த ஒரு பெண்ணை பார்த்தார். அவள் அருகே சென்று அம்மா ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.இளவரசரை பார்த்த அந்த பெண் அவர் பாதம் வணங்கி,ஐயா என் தங்கைக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.அது பிறந்த சில மணி நேரத்தில் என் தங்கை இறந்துவிட்டாள். அவள் கணவர் சென்ற போரில் உயிர் தியாகம் செய்த போர் வீரர்.என் கணவர் மகா குடிகாரர்,அந்த குழந்தை பசியால் அழுது கொண்டு இருக்கிறது. அதற்கு பசும்பால் வாங்ககூட என்னிடத்தில் பணம் இல்லை. இப்படியே போனால் பசியால் குழந்தை இறந்துவிடும்.இதை கேட்ட இளவரசர் மனது இறங்கி.அம்மா அழ வேண்டாம்,நான் உங்களுக்கு பசும்பால் வாங்கித்தருகிறேன்.அதற்கு அந்த பெண் ஐயா இது கானகம் போகும் வழி,இங்கிருந்து ஊருக்குள் போக அதிக நேரம் பிடிக்கும்.உங்கள் ரதத்தில் சென்றாலும் பசும்பால் வாங்கி வருவது ஆகாத காரியம்.உங்கள் உதவும் குணத்திற்கு மிக்க நன்றி.அந்த குழந்தையை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கத்தியவாறே அருகில் இருந்த கோவில் நோக்கி ஓடினாள்.அவள் பின்னால் ஓடிய இளவரசர் கோவிலில் அபிஷேகம் செய்ய வைத்து இருந்த பசும்பாலை பார்த்தார்.உடன ஒரு குடம் பசும்பாலை தன் கையில் எடுத்தார்.இதை பார்தத அர்ச்சகர்,வேந்தே தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, இது கடவுளுக்கு அபிஷேகம் செய்ய வைத்திருக்கும் பசும்பால்,இதை தாங்கள் எடுக்கலாமா? திருப்பி கொடுத்து விடுங்கள் வேந்தே என்றான்.இதை கேட்டு ஆத்திரம் அடைந்த இளவரசர்,அர்ச்சகரை நோக்கி என் தந்தை ஆளும் இந்த நாட்டில் பிறந்த எந்த குழந்தையும் பசியால் செத்தது என்ற வரலாறே இருக்ககூடாது.எல்லாம் எனக்கு தெரியும் என்று கூறி அந்த பெண்ணை நோக்கி விரைந்தார்.அர்ச்சகர் சற்று கோவமாக வேந்தே இது திருட்டுக்கு சமம்,இதனால் நீங்கள் தேவ கோபத்திற்கு ஆளாக  நேரும், சினத்தால் நிறைந்த சிவந்த கண்களால் அர்ச்சகரை பார்த்த இளவரசர்  இங்கே பார்பசியால் வாடும் குழந்தைக்கு பசும்பாலை தர படைத்தவனே மறுத்தாலும் அவனை எதிர்த்து படை எடுக்க தயங்கமாட்டேன் என்று போய் கடவுளிடத்தில் சொல்" என்று சொல்லி விட்டு அந்த பெண்ணிடத்தில் ஓடி,அம்மா இந்தாங்கள் பசும்பால் சீக்கிரம் போய் குழந்தையின் பசி ஆற்றுங்கள் என்றான். அதற்கு அந்த பெண் அபிஷேக பாலை எப்படி குழந்தைக்கு கொடுப்பது? இது தெய்வக்குற்றும் இல்லையா?அதற்கு இளவரசர் அதல்லாம் ஒன்றும் இல்லை அம்மா,அப்படியே இருந்தாலும் அந்த குற்றும் என் மீதே இருக்கட்டும் என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தார். இந்த பசும்பால் திருட்டுக்குதான் மன்னரிடத்தில் நீதி கேட்டு அர்ச்சகர் வந்திருந்தார்.என்ன தீர்ப்பு சொல்லுவதென்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தார் மன்னர்.சற்று நிதானித்து, கோவிலின் உள்ள சென்று அபிஷேக பசும்பாலை எடுத்தது திருட்டுதான், மேலும் பசியால் வாடும் குழந்தைக்கு பசும்பாலை தர படைத்தவனே மறுத்தாலும் அவனை எதிர்த்து படை எடுக்க தயங்கமாட்டேன் என்று கடவுளை பற்றி கூறியது மகா தவறு,இதற்காக இளவரசரின் இரண்டு கைகளையும் வெட்டி மக்களின் பார்வைக்கு படும் படி வைக்கவும்,இனி கோவிலில் திருட நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடம், இது மன்னனின் ஆணை என்றார் நா தழுதலுக்கஇளவரசரின் கைகளை வெட்ட போகும் நேரத்தில். நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று அலறியபடியா உள்ளே ஓடி வந்தாள் அந்த பெண் அவளை பார்த்த மன்னர்,யாரமா நீ?என்ன வேண்டும் உனக்கு? அதற்கு அவள் ஐயா நேற்று பசியால் வாடியா என் தங்கையின் குழந்தைக்கு கடவுளின்  அபிஷேக  பசும்பாலை இளவரசர் கொடுத்தார். இது தெய்வக்குற்றும் இல்லையா? என்று கேட்டதற்கு இளவரசர் அதல்லாம் ஒன்றும் இல்லை அம்மா,அப்படியே இருந்தாலும் அந்த குற்றும் என் மீதே இருக்கட்டும் என்றார். ஆனால் இப்போது அந்த குழந்தை இறந்துவிட்டது.தெய்வக்குற்றம் அந்த குழந்தையின் மீது விழுந்துவிட்டது இப்போது நான் ஒரு அனாதை.இதற்கு காரணமான இளவரசரை மக்கள் முன்னால் வெட்டி நான் அனுபவிக்கும் என் நிலைமையை நீயும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதி கேட்டாள் அந்த பெண்முற்றிலும் மனம் உடைந்த மன்னர், நீதியை நிலை நாட்டும் பொருட்டு,அந்த பெண்ணின் விருப்படியே இளவரசரை வெட்டும் படி ஆணை இட்டார். மக்கள் மத்தியில் இளவரசரை கொண்டு வந்தார்கள்.மக்களை பார்த்து நன்றி கூறிய இளவரசர்.கடவுளை வேண்டி கண்ணை மூடினார்.வாளோடு காத்திருந்த வெட்டும் காவலாளி இளவரசரை ஒரே வெட்டு வெட்டினான்.வாள் இளவரசரை ஒன்றும் செய்யாமல் அவரை கடந்து சென்றது.மறுபடியும் இதேதான் நடந்தது. இதை பார்த்த மக்கள் மத்தியில் இருந்த அந்த பெண் உரக்க சிரித்தாள். ஆச்சரியதோடு அவளை பார்த்தான் இளவரசன். அந்த நிமிடமே உருமாறிய அந்த பெண்,சிவா பெருமனாக காட்சி தந்தாள். என்ன இளவரசே அப்படி பார்க்கிறாய்?உன்னை சோதிப்பதற்காகத்தான் இப்படி ஒரு நாடகம்.ஒரு குழந்தையின் பசி ஆற்ற நீ பண்ணிய காரியம் நீதியானதே. மேலும் பசியால் வாடும் குழந்தைக்கு பசும்பாலை தர படைத்தவனே மறுத்தாலும் அவனைஎதிர்த்து படை எடுக்க தயங்கமாட்டேன் என்று நீ கூறியது உன் தைரியத்தின் உச்சம். ஒரு பெண் கேட்ட நீதிக்காக பெற்ற பிள்ளையே கொல்ல சொன்ன உன் தந்தையின் நீதி போற்றத்தக்கது. வாழ்க உன் புகழ், வாழ்க உன் தந்தையின் புகழ்,வாழ்க உன் மக்கள் என்று கூறி மறைந்தார் கடவுள்.

அருண்குமார் 

தமிழ்மொழி       Main Page