புதிய மாநிலம் உருவாவது எப்படி



இந்திய நாட்டில் ஒரு புதிய மாநிலம் உருவாக வேண்டுமெனில், அதற்கென சட்ட நடைமுறைகள் உள்ளன. 

இதன்படி, இந்திய சட்ட விதி 3ன் படி, புதிதாக உருவாகும் மாநிலம், எந்த மாநிலத்திலிருந்து பிரிக்கப்படுகிறதோ, அம்மாநில சட்டசபைக்கு, ஜனாதிபதியால் பரிந்துரை (மசோதா) ஒன்று அனுப்பப்படும். 

இந்தப் பரிந்துரையை, மாநில அரசு, சட்டசபையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். 

இதன் பின், இதே மாதிரியான மசோதா, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். 

அப்போதுதான் தனி மாநிலம் சட்டப்படி உருவாக்கப்பட முடியும்.