கடலுக்கு இரையாக தமிழ் மீனவனை
படைத்தது யாரோ?
படகோடு சென்றவன் வெறும்கூடாய் வந்தபோது
அழுதவன் யாரோ?
சுட்ட சிங்களவனை கேள்வி
கேட்டவன் யாரோ?
சுடப்பட்ட என் மீனவனை
காத்தவன் யாரோ?
செத்தவன் குடும்பத்தை எண்ணி
நினைத்தவன் யாரோ?
வலையை அறுத்து மீனை
திருடியவன் யாரோ?
வலையால் என் மீனவனின் குரல்வளையை
நசுக்கியவன் யாரோ?
நடுங்கும் குளுரில் மீனவனை நிர்வாணப்
படுத்தியவன் யாரோ?
நெற்றிப் பொட்டில் சுட்டவன் யாரோ?
நீரில் முழுக வைத்து கொன்றவன் யாரோ?
சுறாவுக்கு இரையாக மீனவனை
கொடுத்தவன் யாரோ?
திமிங்களத்தின் தின்பண்டமாக மீனவனை
மாற்றியவன் யாரோ?
எல்லை தாண்டி போகாதே என்று
தடுத்தவன் யாரோ ?
எல்லை தாண்டும்போது சுடு என்று
சொன்னவன் யாரோ?
யாரோ? யாரோ? யாரோ?
பாய்மரத்தோடு போனால் பிணமாகத்தான்
வரும்வோம் என்று தெரிந்தேதான்
கட்டுமரம் கட்டும்போது தனக்கு கருமாதி
செய்துக் கொள்வான் போல தெரிகிறது..