நான் தமிழன்

உலகின் மூத்த மொழி 

என் அம்மாவை காட்டிலும் நான் அதிகமாக  நேசிப்பது என் தாய்மொழி தமிழைத்தான் . வந்தவன் எலரையும் வாழவைத்துவிட்டு அழகு பார்க்கும் குணம் தமிழனுக்கு அதிகமாகவே உண்டு .இந்த இனத்தில் பிறந்ததை பெருமையாகவே கருதுகிறேன்.

தமிழன் என்று சொல்டா !
தலைநிமிர்ந்து நில்லடா !

எழு கடல் வெல்லடா !
வெற்றியோடு வாழடா! 

தன்னல்லம் தலைகனமும் உனக்கு இல்லடா !
திறமையும் தகுதியும் உன் உடைமையடா !

அன்புக்கு நீ அடிமையடா !
ஆணவத்துக்கு நீ எதிரியடா !

பாசக்கார புள்ளடா !
பண்பாட்டு தலைவனடா !

இமைய மலை சிறுசுட !
உன் இதயம் ரொம்ப பெருசு டா !

புலமையும் பழமையும் உன் சொத்துடா !
தமிழ் மொழியும் தேனும் ஒன்னுடா !

தமிழண்ணா பொறந்துட்ட !
தமிழ் மொழிய பேசிட்ட !
நாடு பல ஆண்டுட்ட !
நல்லவனா இருந்திட்ட!

இனி எல்லாம் நல்லதுதான் !
நாளைய உலகம் உனக்குதான்! .

நான் தமிழன் டா!!!!


அருண்குமார்