1.சுடப் போவது தமிழனை என்று தெரிந்திருந்தால்
சிங்களவனின் தோட்டாவும் பின்வாங்கியிருக்கும்
2.இரண்டு கால் புலிகளை நீங்கள் தமிழ் ஈழத்தில்
பார்க்க முடியும்
3.சிந்தப்பட்ட ஈழத்தமிழனின் இரத்தத்தை பார்த்து
பொறாமைப்பட்டது தாய்ப்பால்
"என்னை விட நீ இவ்வளவு பரிசுத்தமா?" என்று
4.எரிந்துக் கொண்டு இருந்த ஈழத்தை பார்த்து
எரிமலை எச்சில் முழுங்கியது
5.இடிதாங்கியால் கூட தாங்க முடியவில்லை
ஈழத்தில் நடந்த கொடுமைகளை
6.பயமும் பயந்திருக்கும் பிரபாகரனை
நேரில் சந்திக்க