திருடர்கள் முன்னேற்ற கழகம்




அரசியல் என்னும் அரக்கனிடத்தில் மாட்டிகொண்டு தமிழன்  படும் இன்னல்களுக்கு அளவே இல்லை. என்றைக்கு திராவிட அரசியலை தமிழன்  ஆதரித்தனோ அன்றைக்கே தமிழ்நாட்டில் தமிழன் அகதியாக மாறி போனான்.சுமார் அறை நூற்றாண்டு காலம் இந்த மண்ணை மாறி மாறி ஆண்ட இந்த திராவிட கட்சிகள்  தமிழனை திருஒடு  ஏந்த வைத்து ஆடை இல்லாமல் அலைய வைத்து அழகு பார்த்ததுதான் மிச்சம்.தமிழன் உரிமைகளை தமிழனுக்கே தெரியாமல் அண்டையில் உள்ளவனுக்கு அள்ளி கொடுத்து ,அத்தியாவசமான பொருட்களுக்கு கூட தமிழனை அழ வைத்ததுதான் கொடுமையின் உச்சம். 

இந்த திராவிட கட்சிகளால் தமிழன் அடைந்த கொடுமைகளில் முதன்மையானது ஈழ தமிழ் உறவுகளின்  படுகொலை. 1948யில் இலங்கை விடுதலை ஆனபின்பு,தமிழர்கள் மீது சிங்கள வெறி அரசு பலதரப்பட்ட அடக்கமுறைகளை கையாண்டது.ஒரு கட்டத்தில் தமிழர்கள் மீது கொலை ,கற்பழிப்பு போன்றவை நிகழ,அமைதி போராட்டம்  ஒய்ந்து ஆயுத போராட்டத்துக்கு தமிழர்கள்  தள்ளப்பட்டர்கள்.2009 நடந்த இறுதி கட்ட  போரில் சுமார் 2 லட்சம் தமிழர்களை  சிங்கள இன வெறி அரசு  படுகொலை செய்தது.இறுதி கட்ட போரின்போது தமிழ்நாட்டின் ஆளும்கட்சி தி மு . போரை தடுக்க வேண்டிய இடத்தில் இருந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி அரை நாள் உண்ணாவிரதம்  போன்ற அறிய வகை நாடங்களை நிகழ்த்தி,அன்றைக்கி மத்திய அரசில் அங்கம் வகித்த தி மு க அமைச்சர்கள்  செய்யாத ராஜினாமாவை  செய்வது போன்ற அதிரேடியான காட்சிகளுக்கு கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இசை ஒளிப்பதிவு ஒலிப்பதிவு இயக்கம் போன்றவற்றை செய்து காட்டி தமிழர் வேதனையில் சாதனை புரிந்தார்.
இவர் திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தமிழன் சந்திக்கும் பிரச்சனை மீனவர் பிரச்சனை.தினமும் தமிழ் மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் இதுவரை சுமார் 700 தமிழ் மீனவர்கள்  சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டு  இருகிறார்கள்,3000க்கு மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள கடற்படை  தாக்குதலால்  முடமாகி இருகிறார்கள்.பலர் கைதாகி இலங்கைளில் உள்ள சிறையில் இருகிறார்கள்.இதை பற்றி 5 முறை தமிழகத்தை ஆண்ட பாரில் சிறந்த பகுத்தறிவு சிங்கம் கருணாநிதி அவர்கள் " தமிழ் மீனவர்கள் பேராசையால்  எல்லை தாண்டி  அதிகமாக மீன் பிடிகிறார்கள்" என்று தமிழ் மீனவர்களை  பற்றி நட்சான்றிதல் வழங்கினர்.மேலும்  இன்று கச்சதீவை மீட்க கோரி  தொடர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி தந்து கொண்டு இருக்கும் கருணாநிதி 1971-1976 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார்,அப்போது 28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்று உறுதி அளிக்கப்பட்டது.இதை பார்த்து கொண்டு அப்போது அமைதியாக இருந்தவர்  இதே புரட்சியின் எழுச்சி நாயகன் கருணாநிதிதான். என்றைக்கி கச்சதீவு கை மாறியதோ அன்றைக்கே தமிழ் மீனவனின் வாழ்வும் உரிமையும் பறிபோனது.அன்றைக்கி ஏன் அவர் மௌனவிரதம் இருந்தார் என்று கழக கண்மணிகள் தான் விடைகண்டு பிடிக்க வேண்டும்.மேலும் இவர்  திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இனத்தின் இளைய தலைமுறை வளமாக இருந்தால் அந்த இனத்தின் எதிர்காலம்  வளமாக இருக்கும். இன்றைக்கு நம் இளைய  தலைமுறை பிள்ளைகள் சிறந்த குடிமக்களாக விளங்குவதற்கு வரலாறு இருக்கிறது,அது என்வென்றால்  1971 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. அது வரை, மதுபான கடைகள் இல்லாத நிலை இருந்தது. அந்த ஆண்டில் முதல்வராக இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, திடீரென மதுவிலக்கை ரத்து செய்தார்; மதுபான கடைகளை திறக்க உத்தரவிட்டார்.இதை அறிந்த முன்னாள் முதல்வர், ராஜகோபாலாச்சாரி, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுநாள் காலையில், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு, காலை, 7:00 மணிக்கே சென்று, மது விலக்கை ரத்து செய்ய வேண்டாம் என, கேட்டுக் கொண்டார்.எனினும் அதை கருணாநிதி கேட்கவில்லை; மதுபானம் தமிழகத்தில் நுழைந்தது.அதன் பிறகு முதல்வராக வந்த, அ.தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., பல ஆண்டுகள் மதுவிலக்கை கடைபிடித்தார்.எம் ஜி ஆர் மறைவுக்கு பின், முதல்வராக வந்த கருணாநிதி மறுபடியும் மதுவிலக்கை ரத்து செய்தார்.அன்றில் இருந்து இன்று வரை திராவிட அரசியல் கட்சிகள்  தள்ளாடாமல்  தமிழகத்தை அண்டதற்கு பல தள்ளாடிய தமிழ் குடிகள்தான் காரணம்.இதற்கு வித்திட்டு,வழிகாட்டிய பெருமை குடிமக்களின் கோமகன் கருணாநிதியே சேரும்.மேலும் இவர்  திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் இல்லாமல் பெரியார் அணை விவகாரம்,காவேரி நதி நீர்  பங்கிட்டு பிரச்சனை,வைத்தியம் பார்பதற்காக வந்த பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய விடயம்,2ஜி ஊழல்,கலைஞர்  தொ(ல்)லைக்காட்சி முறைகேடு,காங்கிரஸ் உறவை முறித்து கொண்டு பின்பு காங்கிரஸின் உதவியுடன் கனிமொழியை  எம் பி ஆக்கிய மானமகெட்ட  அரசியல் காய் நகர்தல்,கொளுத்தப்பட்ட குடும்ப பத்திரிக்கை அலுவலகம்,அதில் நாலு  பேர் மரணம்,மின் வெட்டுக்கு  அச்சாணி ,நில அபகரிப்பு,தமிழ் பள்ளிகளில் தமிழ் இல்லாமல் இருத்தல்,ஜாதிய அரசியல்,சந்தற்ப்பவாத  அரசியல்,ஓட்டுக்கு அரசியல், பணத்திற்கு அரசியல்,தா. கிருத்தினான் கொலை வழக்கு,சட்ட கல்லூரி மாணவர்கள் காவல்துறை முன்பாகவே தாக்கிகொண்ட காட்சிஅணு உலை விவகாரம்,செகப்பு பூதம்,மேகம் 9 மற்றும் சூரிய படம் போன்ற பட தயாரிப்பு நிறவனங்களின் ஆதிக்கம்,ஒரு தெருவுக்கு இரு உற்சாக மதுபான கடை போன்ற எண்ணற்ற சாதனைகள் நிகழ்ந்தது இவர் ஆட்சியில் தான்,இவற்றிக்கு பாராட்டு விழாக்களை எடுத்து,அதிகமான பாராட்டு விழாக்களில் பங்கு பெற்ற  முடி சூடா மன்னன் என்ற சாதனையை சத்தமில்லாமல் செய்தவர் கருணாநிதி.

இது மட்டும் இல்லது ஆட்சியில் இல்லாவிட்டாலும் நாம் செய்யும் எதோ ஒரு காரியத்தின் மூலம் தமிழர்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தஞ்சாவூரில் மீத்தேன் எரி காற்று  எடுக்கும் ஆபத்தான திட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஸ்டாலின்-முன்னால் துணை முதல் அமைச்சர் கருணாநிதியின்  அன்பு மகன் என்பது  குறிப்பிடத்தக்கது.இப்படி தமிழர்களின் முன்னேற்றத்திற்காக குடும்பம் கழகமாகவும்,கழகம் குடும்பமாகவும் இருந்து ,இரவும் பகலும் பதிக்கி வைத்திருக்கும்  பணத்தை நினைத்து அல்ல, தமிழர்களின்   வளமான வாழ்வை நினைத்து செயல்
பட்டு கொண்டு இருக்கும்,மிக பெரிய குடும்பத்தின் தலைவர்  ஐயா கருணாநிதி மட்டும் தான்.மேலும் இவர்தான்   திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் என்பதும்  இங்கே அவசியம் குறிப்பிடத்தக்கது. 
 அருண்குமார்