திராவிட என்ற சொல் தமிழர் என்ற சொல்லின் திரிபு என்றும்
தமிழர்>>த்ரமில>>த்ரமிட>>திராவிட என்று
சான்று இருக்கிறது.இன்று திராவிடன் என்று சொன்னால் தமிழுடன் கூட தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளும் சேர்ந்த வருகிறது.தமிழ் மொழியுடன் பிற மொழி சொற்கள் கலக்கம் பெற்று மற்ற மொழிகள் உருவானதை யாரும் மறுக்கமுடியாத உண்மை.இன்றுவரை திராவிட மொழிகளின் கிளை மொழிகளாக சுமார் 80 மொழிகள் உள்ளது.இவை அனைத்திற்கும் தாய்மொழி தமிழ் என்பதை நினைவில் கொள்க.
பிற்பாடு ஏற்பட்ட மன்னர் ஆட்சி காலத்தில் திராவிடர்கள் சேரர்,சோழர்,பாண்டியர்
மற்றும் பல்லவர்களாக பிரிந்து இந்த நிலத்தை ஆண்டு வந்தனர்.காலத்தின் மாற்றத்தில்
மன்னர் ஆட்சி மாறி மக்கள் ஆட்சி வந்த பிறகும் திராவிடர்கள் என்ற வழக்கம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.திராவிட தேசத்தில் இருக்கும் நாடுகள்
தங்களின் மொழிவாரியாக பிரிந்து வாழ துடைங்கினார்கள்.இதில் ஏற்பட்ட பல மாற்றங்களை
தமிழன் அறிய மறைந்தது கசப்பான உண்மை.
திராவிடர் என்ற பெருமையில்,தந்தை பெரியாரின் தலைமையில் தன்மானத்தோடு வாழப்பலகினான்,ஹிந்தியை கடுமையாக எதிர்த்தான்,குலகல்வியை ஒழித்தான்,தீண்டாமையை தீக்கிரையக்கினான்,,தேவதாசிகளை இல்லத்தரசிகள் ஆக்கினான்,வகுப்பு வாரி இட ஒதுக்கிடு சட்டத்தை இயற்றி வரலாற்றில்
இடம்பிடித்தான். ."எல்லாம் சில காலம்" என்று சொல்லுவார்கள்,அது உண்மையாகி போனது,திராவிடன் என்று தமிழனிருக்க,திராவிட குடும்பத்தின் சகோதர்கள் மட்டும் அவனை தனிமையில்
விட்டுவிட்டு தங்கள் சுய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.
அன்பின் காரணமாகவும், வரலாறு அறியாமையின் காரணமாகவும் அவனும் வாழ்ந்து வந்தான். இயற்கையின் நீதி வழியாக வடக்கே
ஆரம்பித்து தெற்கே தென் குமரியின் கடலில் கலக்கவேண்டிய காவேரி தண்ணீரை தா என்று
கேட்டான்,உபரி தண்ணீரை கூட தர முடியாது என்று
சொல்லிவிட்டான் ஒரு திராவிட சகோதிரன்,இருந்தாலும் பரவாயில்லை என்று இன்றுவரை அவனுக்கு மின்சாரம்
தந்துக்கொண்டிருக்கிறான். சரி இன்னொரு சகோதரனிடத்தில் தண்ணீர் கேட்டான்,அவனோ இருக்கும் அணையை இடித்துவிட்டு இன்னொரு
அனையைக்கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறான். அவனுக்கும் அரிசி கொடுத்து உதவிக்கொண்டுதான் இருக்கிறான்
தமிழன்.
தமிழனுடைய திராவிட சகோதரர்கள் அனைவரும் நன்றாக வாழ தன்
உடமைகளை எல்லாம் தந்து கொண்டுதான் இருக்கிறான் தமிழன். ஆனால் அவனுக்காக எந்த
திராவிட சகோதிரனும் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை .
சரி தன் வாழ்வின் அடிப்படை விதிகளை தீர்மானிக்கலாம்
என்று அரசியலை எட்டி பார்த்தால்,தமிழ்நாட்டில்
திராவிட கட்சிகளின் ஆட்டம் தலைவிரித்து ஆடுகின்றன.மேலும் மேலும் பல திராவிட
கட்சிகளே உதையமாகின்றது.சரி நாம் திராவிடந்தானே நம் சகோதரன் என்ன கட்சி வைத்திருக்கிறான் என்று பார்த்தால் தமிழகத்தை
தவிர வேறு எந்த திராவிட சகோதரனும் திராவிடனுக்கு அவன் மண்ணில் கட்சி நடத்தவில்லை. காரணம் அவன் உணார்ந்துவிட்டான் அவன் திராவிடன் இல்லை
என்று, அதனால்தான் அவன் நிலத்தை அவனே ஆண்டுக்கொண்டுக்கிறான்,ஆனால் தமிழனோ அனைத்து திராவிட சகோதரனையும் தன்னை ஆழ
வைத்துவிட்டு ஆழகுபார்த்துகொண்டுக்கிறான் என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளபோகிரானோ தெரியவில்லை.
திராவிட
தேசம் என்ற பெரும் தேசத்துள் இன்று அவனை தவிர வேறு யாரும் இல்லை.திராவிடன் என்ற சொல் வெறும்
மாயை என்றும் ,அது
ஒரு கானல் நீர் என்றும் அவன் புரிந்துகொள்ளும் காலம் வந்துவிட்டது .
இல்லாத விடையத்தை இருக்கிறது என்று நம்புவது எப்படி ஒரு
முட்டாள்த்தனமோ, அதைவிட
முட்டாள்த்தனம் இல்லாத விடையத்தை வைத்துகொண்டு மக்களை ஏமாற்றும் கட்சிகளை
நம்புவது.
இனியாவது தமிழன் புரிந்து கொள்ளவேண்டியது அவனுக்கான உரிமை,அவனுக்கான அரசியல்,அவனுக்கான பாதுகாப்பு
போன்றவற்றை பேணிப்பாதுகாப்பது.அதற்கு அவன் செய்ய
வேண்டியது ,திராவிடனாய்
இல்லாமல் நாம் தமிழராய் ஒன்று சேர்வதே அவனுக்கு அவன் செய்யவேண்டிய வரலாற்று கடமை.
அருண்குமார்
