My Baby



அப்பாவின் பதிவுகள்,

வாழ்க்கை நமக்கு பல சுழலில் மகிழ்ச்சியாகவும் சில சுழலில் சோகமாகவும் இருப்பது இயல்பு.என்னுடைய வாழ்விலும் அப்படி நிகழ்ந்த ஒரு  மிக மகிழ்ச்சியான விடையம்தான் நவம்பர் 12,2013 மாலை 4.30 மணிக்கு எனது மகன் அட்சயசீமான் பிறப்பு. இன்றும் என் நினைவில் இருக்கிறது,மருத்துவமனை வெளியே நான் அமர்ந்திருந்தேன். எனது தாயும், மாமியாரும் மருத்துவமனை உள்ளே இருந்தார்கள். 4.30 மணிக்கு மருத்துவர் என்னை அழைத்து அவனை என் கையில் கொடுத்தார்கள். அவன் என்னை பார்த்தான், நானும் அவனை பார்த்தேன். அவனுக்கு நான் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எனக்கு அன்றைக்கே தெரியும் இவன் என்னை விட பல மடங்கு நல்லவனாகவும்,பிறருக்கு உதபுபவனாகவும்,பிறரை மதிப்பவனாகவும்,ஒரு சிறந்த மனிதனாக வருவான் என்று. எனக்கு அப்படி தோன்றிய காரணம்  தெரியவில்லை.

அவனை பார்த்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியை,என் தந்தை என்னை பார்த்தவுடன் அடைந்திருப்பரா என்று எனக்கு தெரியாது.ஆனால் எனது மகனை பார்க்கும் போது எனக்கு தோன்றியது மேற்படி நான் சொன்னது .
அவனுக்கு தடுப்பு ஊசி போடும்போது எல்லாம் அழமாட்டான் ஆனால் சொட்டு மருந்து போடும்போது அழுவான். மருத்துவமனையில் இருந்து   வீடு திரும்பிய உடன். தினமும் என் துணைவின் வீட்டில் போய்  அவனை பார்ப்பேன். மூன்று மாத காலம் அங்கவே தான் இருந்தான். அப்புறம் என் வீட்டுக்கு வந்தான்.அவன் வந்த பிறகு என் கால அட்டவனையை முழுவதுமாக மாறிவிட்டன.வீட்டின் நடுவே தூலி வந்தது,எராளமான விளையாட்டு சாமான்கள் வந்தது,பொம்மைகள் வந்தது,குழந்தையின் துணிகள் வந்தது.மகிழ்ச்சியும் ஏராளமாய் வந்தது.அவன் குரல் கேக்க ஆர்வமாய் இருப்பேன்.எப்போதாவது ஏதாவது அவன் மொழியில் பேசுவான். இரவில் அழுவான்.காலையில் அவன் மொழியில் பேசி என்னை எழுப்பி விடுவான்.நான் கல்லூரி முடித்து வந்தவுடன் நேரம் போவதே தெரியாது.

கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தவன் ஒரு நாள் திரும்பி படுத்தான்.தவழ ஆரம்பித்தான்,ஒரு நாள் உட்கார்ந்தான்,ஒரு நாள் நின்றான்,ஒரு நாள் தாத்தா என்று கூப்பிட்டான்,பிறகு தொதொ,சாச்சா,அக்கையா,லேலேலே,போன்ற எண்ணற்ற மழலை பேச்சுக்கள்.என்னை அதா என்று அழைப்பான்.அப்பா வரலை,அதா தான் வந்தது.அவன் தூங்கி எழுந்து விட்டால் உடனே என்னையும்  எழுப்பி விடுவான்.அவனுக்கு கார் மிகவும் பிடிக்கும்,மிருகங்கள் தொலைகாட்சியில் வந்தால் பார்த்துக்கொண்டே இருப்பான். அப்போது சாப்பாடு உட்டுவது என் மனைவிக்கு மிக சுலபம்.ஆப்பிள் விரும்பி சாப்பிடுவான்.ipadயில் -Talking Tom என்ற மென்பொருள்,நாம் பேசுவதை ஒரு பூனை அப்படியே திருப்பி பேசும்,அதோடு பேசுவான்.பந்தை  துக்கி போட்டால் மட்டையால் அதை அடித்து சிரிப்பான். இதை நான் பரப்ப எழுதவில்லை பதிவு செய்கிறேன். காலத்தின் ஓட்டம் இதை மறக்க வைக்கலாம்,அதனால் இதை எழுதி வைக்கிறேன்.ஒரு நாள் என் மகன்  அட்சயசீமான் இதை படிப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  எனது மகன் வல்லவனாகவும்,அதே நேரம் நல்லவனாகவும் வர எல்லாம் வல்ல தேவனை பிராத்தனை செய்கிறேன்.