புலித் தலைவனின் புலிகுட்டியே
புலியாக பிறந்தாலும் கிளியாக நீ
பேசின வார்த்தைகள் ,காற்றில் கரையும் முன்
காய்ந்துபோன கருவாடாய் குள்ளநரிகளின்
மத்தியில் உன்னை பார்த்தபோது,உயிர்
இல்லாத வெறுங்குடாய் வெந்து போனேன்
கருவி தரித்த தன்மான தலைவனுக்கே
அவநிலை!!
அருவி கொஞ்சும் உன் அன்பு
உள்ளத்திற்கா இந்த வெறும்நிலை??
குண்டு புகுந்த உன் தேகத்தில் வழிந்து
வந்த
குருதி சொன்னது,இது தோட்டாவின் கண்ணீர் என்று
பாலச்சந்திர
நீ சிதைக்க படவில்லை
விதைக்க படுகிறாய்
நீ சுடப்பட வில்லை
நடப்படுகிறாய்
சுட்டபின்னும் சுடராய் எரிகிறாய்
செத்தபின்னும் சரித்திரம்
படைத்திருக்கிறாய்
துயில் கொள் ...துயில் கொள் ...
தன்மான தலைவனின் தம்பிகள் வருவார்கள்
நீதி பெறுவார்கள் ,(ஈழ)நாடு அடைவார்கள்....
கண்ணீருடன்
அருண்குமார்