காதலில் தோற்று குடிகாரனாய்
மாறிப்போன என் மாணவன் ஒருவனுக்கு சமர்ப்பணம்
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
காரணத்தினால் என்னவோ
ஒரே ஒரு இருதயத்தை
படைத்தான் பகலவன் ...
ஆனால் இன்று எத்தனை
எத்தனை காதல்கள்
பள்ளியில் வருவது
மறக்கமுடியாத காதல் !!!
கல்லூரியில் வருவது
கண்முடித்தனமா காதல் !!!
வேலையில் இருக்கும்போது
வருவது பணக்காதல் !!!
இவை மூன்றில் நீ தோற்றபிறகு,
காதல் தோல்வி என்ற அநுபவம்
உன்னை பக்குவப்படுத்தி
உன் முந்தைய தவறுகளை
சீர்படுத்தி
விட்டுக்கொடுத்தலும்
கட்டுப்படுத்தலும் உனக்கு வந்தப்பிறகு
வரும் காதல்தான் உன்
வாழ்க்கையின் இறுதி காதல் !!!!
காதலில் ஜெயித்தவன்
காதலனாகிறான்
காதலில் தோற்றவன்
சாதனையாளனாகிறான்
மறந்துவிடாதே
குடியும் தாடியும் காதல்
தோல்வின் கூட்டாளிகள்
குடித்தனமும் தினக்கூலியும்
காதல் வெற்றியின் பாட்டாளிகள்
வாலிபம் உன் கண்ணை மறைக்க
கன்னியும் கணினியும் உன்
நினைவுகளை சீர்குலைக்க
விழுவாய் காதலில்
கரைவாய் கல்லூரியில்
திரிவாய் தெருவில்
இறப்பாய் இறுதியில்
காதலில் தோற்ற எந்த
பெண்ணும் குடிப்பதில்லை
காதலில் தோற்ற எந்த ஆணும்
மறுபடியும் காதலிக்காமல் இருந்ததில்லை !!!
இதுவே உலக நீதி
அருண்குமார்